இந்தியாவில் தற்போது ஸ்கூட்டர்கள் விற்பனையில் பெரும் புரட்சியே நடந்து வருகிறது எனச் சொல்லலாம். பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனையாகி வருகின்றன. கிட்டத்தட்ட இருசக்கர வாகன விற்பனையில் 10 சதவீத இடத்தை எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் பிடித்துவிட்டது எனச் சொல்லலாம்.

முன்பெல்லாம் சாலைகளில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்ப்பதே அரிய விஷயம். ஆனால் இன்று நீங்கள் எப்பொழுது சாலைக்குச் சென்றாலும் குறைந்த பட்சம் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையாவது பார்க்க முடியும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடம் பிடித்துவிட்டது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெரும்பாலும் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் அளவிற்கு பெர்பாஃமென்ஸ் இருக்காது எனப் பலர் கருதுவார்கள்.

ஆனால் ஏத்தர் உள்ளிட்ட போன்ற பல நிறுவனங்களில் ஸ்கூட்டர்கள் பெர்ஃபாமென்ஸிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் தனக்கென ஒரு இடத்தை மார்கெட்டில் பிடித்துள்ளது. அதாவது. இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் தரமானதாகவும், அதே நேரத்தில் ஸ்டைல், பெர்பாமென்ஸ் போன்ற விஷயங்களில் சிறப்பானதாகவும் இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் ஏத்தர் நிறுவனம் சைலெண்டாக கடந்த மே மாதம் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை அந்நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் எட்டாத இலக்கை கடந்த மே மாதம் எட்டியுள்ளது. அதாவது கடந்த மே மாதம் மொத்தம் 3787 ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அந்நிறுவனம் துவங்கப்பட்டது முதல் ஒரே மாதத்தில் நடந்த அதிகபட்ச விற்பனை இதுதான்.

Ather | Sales | May 22 Sales Vs | Growth % |
May-22 | 3,787 | May 21 (YoY) | – |
May-21 | NA | Apr 22 (MoM) | 0.21 |
Apr-22 | 3,779 | – | – |

கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனம் 3,779 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இதை விட இந்த மாதம் வெறும் 9 ஸ்கூட்டர் விற்பனை தான் அதிகம் என்றாலும் இது தான் இதுவரை நடந்த அதிகபட்ச விற்பனை என்ற மைல்கல்லை வைத்துள்ளது. இந்த மாதம் அதை விட அதிகமான விற்பனை நடக்கும் என அந்நிறுவனத்தினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

எலெக்ட்ரிக் பைக் மார்கெட்டில் உண்மையான ஹீரோவாக இருப்பது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தான். அதே போல இந்த சந்தையில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமும், ஓகினாவா, ப்யூர் இவி, ஓலா, பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் போட்டிக்கு இருக்கிறது. ஏத்தர் நிறுவனம் மார்கெட்டில் 450 மற்றும் 450X ஆகிய 2 ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

ஏத்தர் நிறுவனத்தைப் பொருத்தவரை அந்நிறுவனத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் நேரடியாக முதலீடு செய்துள்ளது. அந்த முதலீட்டில் தான் ஏத்தர் நிறுவனம் வாகன தயாரிப்பு ஆலைகள், ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகள், சார்ஜிங் கட்டமைப்பு, வாகன சப்ளே செயின், உள்ளிட்ட பல விஷயங்களுக்காகச் செலவு செய்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் ஐக்யூப் எலெக்டரிக் ஸ்கூட்டர் இருக்கிறது. எனச் சொல்லலாம் கடந்த மே மாதம் இந்த ஸ்கூட்டர் 2637 எண்ணம் விற்பனையாகியுள்ளது.