சர்க்கரை ஏற்றுமதியில் புதிய சாதனை: இஸ்மா- தினமணி


சர்க்கரை

புது தில்லி: நடப்பு சந்தைப் பருவத்தில் நாட்டின் சாக்கரை ஏற்றுமதி 86 லட்சம் டன்னைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக இந்திய சாக்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

சாக்கரை ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா, செப்டம்பருடன் முடிவடையவுள்ள நடப்பு 2021-22-ஆம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்தில் மே வரையிலுமான நிலவரப்படி 86 லட்சம் டன் சாக்கரை ஏற்றுமதி செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதேசமயம், முந்தைய 2020-21 சந்தைப் பருவத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் சாக்கரை ஏற்றுமதி அளவு 70 லட்சம் டன் அளவுக்கே காணப்பட்டது. அதேநேரம் உள்நாட்டு உற்பத்தி 3.12 கோடி டன்னாக காணப்பட்டது.

இதுவரையில், 94-95 லட்சம் டன் சாக்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே, 86 லட்சம் டன் சாக்கரை ஏற்கனவே ஏற்றுமதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபா-ஏப்ரல் சந்தையில் உள்நாட்டு சந்தையில் 1.60 கோடி டன் அளவுக்கு சாக்கரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 6 வரையிலான நிலவரப்படி உள்நாட்டில் 3.52 கோடி டன் அளவுக்கு சாக்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த சந்தைப் பருவத்தின் இதே காலகட்டத்தில் சாக்கரை உற்பத்தி 3.07 கோடி டன்னாக இருந்தது.

34 லட்சம் டன் எத்தனால் பயன்பாட்டுக்கு திருப்பிவிட பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் சாக்கரை உற்பத்தியானது நடப்பு சந்தைப் பருவத்தில் 3.60 கோடி டன்னாக இருக்கும் என இஸ்மா தெரிவித்துள்ளது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube