புதுமணத் தம்பதிகள் நயன் மற்றும் விக்கி இன்று அதிகாலை முக்கிய இடத்திற்குச் செல்கிறார்கள் – தமிழ் செய்திகள்


இயக்குனர் விக்னேஷ் சிவனை நேற்று நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது குறித்தும் பார்த்தோம்.

wedding naya vignesh09062022m

பிரம்மாண்டமாக சிவாச்சாரியார்கள் ஆசியுடன் நடந்த இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வந்தன. இந்த நிலையில் நேற்று காலை திருமணம் நடந்த அதே இடத்தில் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாகவும் இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

wedding naya vignesh09062022m1

இந்நிலையில் நேற்று திருமணம் முடித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் இன்று அதிகாலை திருப்பதி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு ஏழுமலையானை தரிசிக்க விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிகள் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தத் திருமணம் திருப்பதியில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது ஆனால் அதன் பின்னர் ஒருசில காரணங்களால் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube