தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள புரோஸோன் மாலில் “உணவு திருவிழா 2022” நிகழ்வு உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. ஜூன் 3 ம் தேதி முதல் ஜூன் 5 ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
செந்தில்பாலாஜி
தொடக்கநாளில் விழாவை அலங்கரிக்கும் விதமாக நடைபெற்ற பரத நாட்டியம் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் விதமாக அமைந்தது.விழாவில் உணவு வகைகளை ருசித்துப் பாராட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, உணவுத் திருவிழாவை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அன்னபூர்ணா கௌரிசங்கர் ஹோட்டல் குழுமத்தின் செயல் இயக்குனர் விவேக் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்பல்வேறு பிரபல நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து பாரம்பரிய உணவு வகைகள் , துரித உணவு வகைகள், சைவம், அசைவம் என பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்கிய நிலையில், பங்கேற்பாளர்கள் உணவுத் திருவிழா தங்களை கவர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டனர்.

கோவை உணவுத் திருவிழா
உணவு திருவிழாவில் வித விதமான தோசைகள் , கடல் உணவுகள், சிக்கன், மட்டன வகைகள் என பல விதமான உணவு வகைகள் இருந்தாகவும், சாப்பிட அனைத்தும் ருசியாக இருந்ததாகவும், கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இருந்ததாகவும் குழந்தைகள் தெரிவித்தனர். மேலும் குழந்தைகளுக்கு விளையாட நிறைய வாட்டர் கேம்ஸ் இருப்பதாகவும் அதில் விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாகவும் உணவு திருவிழாவிற்கு வந்திருந்த குழந்தைகள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை உணவுத் திருவிழா -2022
உணவு திருவிழா சிறப்பாக இருந்தாகவும், துவக்க விழா நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்ததாகவும் இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர். கோவையில் பொழுது போக்கிற்கு பெரிதாக எதுவும் இல்லாத நிலையில் இது போன்ற உணவு திருவிழாக்கள் சந்தோஷம் அளிப்பதாகவும் வித விதமான சாப்பாடு சாப்பிட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். கூட்டம் அதிகம் இருந்தாலும் எஞ்சாய் பண்ண முடிவதாக உணவு திருவிழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.
Also Read: கல்யாணத்த நிறுத்துங்க… கடைசி நேரத்தில் மணப்பெண் சொன்ன அதிர்ச்சி காரணம்
இந்த உணவு திருவிழாவிற்கு நல்ல கூட்டம் வருவதாகவும் , தங்கள் அரங்கில் ஐஸ்கிரிம் தோசை, சாக்லேட் தோசை என 99 வகையிலான சாப்பிட கொடுப்பதாகவும், பொதுமக்கள் ஆர்வத்துடன் இவற்றை உண்டு ரசித்து செல்வதாகவும் உணவு திருவிழாவில் கடை வைத்திருப்பவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்த உணவு திருவிழா வரும் 5 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் மாலை வேளையில் குழந்தைகளுடன் பெரியவர்கள் பொழுதை கழிக்கும் வகையில் உணவு திருவிழாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.