ராயல் என்பீல்டு பைக்குக்களை தயாரிக்கும் ஈஷர் நிறுவனம் கடந்த மே மாத விற்பனை குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஓராண்டில் அந்நிறுவனம் மொத்தம் 133.18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அதுவே ஒரு மாதத்தை ஒப்பிடும் போது 2.39 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் 63,643 பைக்குக்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு மே மாதம் இந்த விற்பனை வெறும் 27,294 ஆக மட்டுமே இருந்தது.

இதில் உள்நாட்டு விற்பனையில் இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 53,525 ஆக இருக்கிறது. இந்த சந்தையில் மட்டும் மொத்தம் 166.65 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்தாண்டு மே மாதம் வெறும் 20,027 பைக்குக்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 0.61 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 53,852 பைக்குக்கள் விற்பனையான நிலையில் கடந்த மே மாதம் அதை விடக் கொஞ்சம் குறைவாக 53,525 மட்டுமே உள்நாட்டில் விற்பனையாகியுள்ளன.

ஏற்றுமதியைப் பொருத்தவரை கடந்த மே மாதம் மொத்தம் 10,118 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது கடந்த 2021 மே மாதத்தை ஒப்பிடும் போது 40.12 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அப்பொழுது வெறும் 7,221 பைக்குக்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தன. கடந்த ஏப்ரல் மாத ஏற்றுமதியை ஒப்பிட்டாலும் 21.86 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 8,303 வானகங்கள் மட்டும் ஏற்றுமதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் தங்கள் வாகனங்களை இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளது. 350 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள், 350 சிசிக்கு அதிகமாக இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளது. அதன்படி விற்பனை நிலவரங்களைப் பிரித்துப் பார்க்கலாம். ராயல் என்பீல்டு நிறுவனத்தில் 350 சிசிக்கும் குறைவான பைக்குகள் தான் அதிகமாக விற்பனையாகிறது. கடந்த மே மாதம் இந்த கேட்டகிரியில் மொத்தம் 53.835 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது வே 350 சிசிக்கு அதிகமா பைக்குக்கள் மொத்தம் 9,808 பைக்குக்கள் விற்பனையாகியுள்ளன.

இதைக் கடந்த 2021 மே மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் அப்பொழுது 350 சிசிக்கு குறைவான பைக்குக்கள் மொத்தம் 22,734 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதுவே 350 சிசிக்கு அதிகமான பைக்குகளை விற்பனை செய்தால் மொத்தம் 4,560 பைக்குக்கள் விற்பனையாகியுள்ளன. 350 சிசிக்கு குறைவான கேட்டகிரியில் 136.80 சதவீத வளர்ச்சியும், 350 சிசிக்கு அதிகமான கேட்டகிரியில் 115.09 வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இதுவே கடந்த ஏப்ரல் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் அப்பொழுது 350 சிசிக்கு குறைவான கேட்டகிரியில் 51,564 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. 350 சிசிக்கு அதிகமான கேட்டகிரியில் மொத்தம் 10,591 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.இது 350 சிசிக்கு குறைவான பைக்குகளில் 4.40 சதவீத வளர்ச்சியையும் 350 சிசிக்கு அதிகமான பைக்குகளில் 7.39 சதவீத வீழ்ச்சியையும் அளித்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தைப் பொருத்தவரை கிளாசிக், மீட்டியோர், எலெக்ட்ரா, மற்றும் புல்லட் ஆகிய பைக்குக்கள் 350 சிசிக்கு குறைவாகவும், ஹிமாலயன் மற்றும் 650 ட்வின்ஸ் ஆகிய பைக்குக்கள் 350 சிசிக்கு அதிகமாகவும் தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனம் இந்த மாத இறுதியில் புதிய ஹண்டர் 350 சிசி பைக்கை வெளியிடவுள்ளது. இந்த பைக் ரூ1.70 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஹண்டர் பைக்கில் மீட்டியோ் 350, கிளாசிக் 350 ஆகிய பைக்குகளில் உள்ள அதே 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜக்ஷன் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 20.4 எச்பி பவரையும் 27 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும், இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மார்கெட்டில் உள்ள ஹோண்டா சிபி350ஆர்எஸ், ஜாவா ஃபார்ட்டி டூ, மற்றும் புதிதாக அறிமுகமாகவுள்ள பஜாஜ் – டிரையம்ப் பைக்கிற்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஷாட்கன் 650, சூப்பர் மீட்டியோர் 650, கிளாசிக் 650, ஹிமாலயன் 450, புதிய தலைமுறை புல்லட் 350 ஆகிய பைக்குகளை அடுத்தடுத்து களம் இறக்கத் தயாராகி வருகிறது. மார்கெட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்குப் போட்டியாகப் பல பைக்குகள் வந்தாலும் யாராலும் ராயல் என்பீல்டுக்கான மவுசை கிட்டக் கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.