இனிமேல் பிரச்னையே இல்ல… கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

கியா இந்தியா (Kia India) நிறுவனம் தனது டீலர்ஷிப்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைக்கவுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவின் 12 நகரங்களில் செயல்பட்டு வரும் தனது 15 டீலர்ஷிப்களில், ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இவை 150kW ஃபாஸ்ட் சார்ஜர்கள் ஆகும்.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

கியா நிறுவனம் வெகு சமீபத்தில் இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து தனது டீலர்ஷிப்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜர்களையும் கியா இந்தியா நிறுவனம் அமைக்கவுள்ளது. இந்திய சந்தைக்கு கியா நிறுவனம் தற்போதைய நிலையில் 100 இவி6 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே ஒதுக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

ஆனால் இந்த எலெக்ட்ரிக் காருக்கு தற்போது வரை 356 முன்பதிவுகள் குவிந்துள்ளன. கியா இவி6 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். ஜிடி லைன் ஆர்டபிள்யூடி (ரியர் வீல் டிரைவ்) மற்றும் ஜிடி லைன் ஏடபிள்யூடி (ஆல் வீல் டிரைவ்) ஆகியவைதான் அந்த வேரியண்ட்கள். ஆனால் இந்த 2 வேரியண்ட்களிலும், 77.4kWh பேட்டரி தொகுப்புதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

இதில், ரியர் வீல் டிரைவ் வேரியண்ட் 225 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் 345 பிஹெச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளது. இதற்கிடையே கியா இவி6 எலெக்ட்ரிக் கார் சிறப்பான டிரைவிங் ரேஞ்ஜை பெற்றுள்ளது.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 528 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 425 கிலோ மீட்டர்கள் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 350kW சார்ஜரை பயன்படுத்தினால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்து விட முடியும்.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

இது 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வதற்கான நேரம் ஆகும். இதை செய்வதற்கு 50kW சார்ஜர் 73 நிமிடங்களை எடுத்து கொள்ளும். கியா டீலர்ஷிப்களில் தற்போது நிறுவப்படவுள்ளது 150kW சார்ஜர்கள் ஆகும். இதை பயன்படுத்தினால் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகும்.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

கியா நிறுவனத்தின் மற்ற கார்களை போலவே, இவி6 எலெக்ட்ரிக் காரிலும் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 8 ஏர் பேக்குகள், 14 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் அடாஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்துடன் 60க்கும் மேற்பட்ட வசதிகளுடன் கியா கனெக்ட் தொழில்நுட்பமும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஜிடி லைன் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்டின் விலை 59.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் ஜிடி லைன் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட்டின் விலை 64.95 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இவி6 உள்ளது. இது அதிக விலை கொண்ட கார் என்றாலும் கூட, கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும். வரும் காலங்களில் இந்திய சந்தையில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது. வரும் காலங்களில் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதே பாணியில் கியா நிறுவனம் செல்டோஸ் போன்ற கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

அத்துடன் இந்திய சந்தைக்கு என பிரத்யேகமாக புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் காலங்களில் கியா நிறுவனத்திடம் இருந்து இந்திய வாடிக்கையாளர்கள் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

இனிமேல் பிரச்னையே இல்ல... கார் டீலர்ஷிப்களில் இப்படி ஒரு வசதியா? கேக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

இதற்கிடையே கியா நிறுவனத்தை போல் மேலும் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் டீலர்ஷிப்களில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எலெக்ட்ரிக் கார் வைத்திருப்பவர்கள், தங்கள் கார்களின் பேட்டரிகளை எந்தவிதமான பிரச்னைகளும் இன்றி சார்ஜ் செய்து கொள்வது மிகவும் எளிமையாக மாறி வருகிறது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube