பள்ளி பாடத்திட்டத்தில் நீண்ட காலமாக அமலில் உள்ள இருமொழிக் கொள்கையை மாற்றி மும்மொழிக் கொள்கையை புகட்டும் நடவடிக்கைகள் சத்தம் இன்றி துவங்கியுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPSC Series 4: உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய ரிசர்வ் காவல் படையின் பங்கு என்ன?
இருப்பினும் கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது என தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களுக்கு தமிழ் மொழியுடன் சேர்த்து அவர் தம் தாய் மொழியையும் விருப்பப்பாடமாக தேர்வு செய்து எழுதும் முறை தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே தமிழக அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ள மொழிக் கொள்கையின் அடிப்படையில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழி கொள்கையை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதில் மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியை முன்னிலைப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று நாளிதழ்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.