தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தது. முகூர்த்த நாளை முன்னிட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் அதிகளவில் வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Also see… Tirupati | திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளே அதிகளவில் இயக்கப்பட்டதால் பேருந்து கிடைக்காமல் மக்கள் விடிய, விடிய காத்திருந்தனர். நள்ளிரவு வரை காத்திருந்தும் முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்பதிவில்லா சிறப்பு பேருந்தை அதிகளவில் இயக்கக் கோரி போராட்டமும் நடத்தினர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.