இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி… காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனம் விற்பனைச் செய்து வரும் புகழ்பெற்ற சூப்பர் கார் மாடல்களில் ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் (AMG GT Black Series)-ம் ஒன்று. இது ஓர் இரு கதவுகள் கொண்ட உயர்-திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட கூபே ரக காராகும். இந்த சூப்பர் காரை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகின்றன.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

ஆனால் இப்போதே இக்காரின் முதல் யூனிட் இந்தியாவை வந்தடைந்திருக்கின்றது. அதாவது, இப்போதே முதல் முறையாக இக்காரை இந்தியர் ஒருவர் வாங்கியிருக்கின்றார். இரண்டு ஜிடி பிளாக் சீரிஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குவதாக மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

ஒவ்வொரு யூனிட்டும் ரூ. 5.50 கோடி மதிப்புடையது என ஆச்சரியமளிக்கும் தகவலை மெர்சிடிஸ் ஏஎம்ஜி கூறியுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த காரை இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் தற்போது வாங்கியிருக்கின்றார். பூபேஷ் ரெட்டி எனும் நபர் அவர் ஆவார். இவருக்கே கார் தற்போது டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்தியாவிற்கான எம்டி மற்றும் சிஇஓ-வான மார்டின் ஷவங்க் என்பவரே காருக்கான சாவியை பூபேஷ் இடத்தில் வழங்கியிருக்கின்றார். இந்த நிகழ்வுகுறித்து மார்டின் ஷவங்க் கூறியதாவது, “செயல்திறன் மிக்க ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் காரை இந்தியாவில் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். உலகளவில் மிகவும் விரும்பத்தக்க கார் மாடலாக இது இருக்கின்றது. நல்ல ரெஸ்பான்ஸை வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெற்று வருகின்றது” என்றார்.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

தொடர்ந்து, இக்காரை மாஸ்டர் பீசாக குறிப்பிட்ட அவர் மேலும் ஓர் யூனிட்டை, அதாவது, இரண்டாவது யூனிட் பிளாக் சீரிஸையும் அடுத்த மாதம் இந்தியாவில் டெலிவரி கொடுக்க இருப்பதாக தெரிவித்தார். ஏஎம்ஜி ஜிடி 3 ரேஸ் காரின் சாலை பயன்பாட்டு வசதிக் கொண்ட காராகவே பிளாக் சீரிஸ் உள்ளது.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

இக்காரில் ஏஎம்ஜி-இன் வி8 மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரில் மிகப் பெரிய மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறந்த த்ரோட்டில் ரெஸ்பான்ஸ், அதிக ஆர்பிஎம்மிலும் குறைவான மாசு வெளிப்பாடு என பல்வேறு மாற்றங்கள் மோட்டாரில் செய்யப்பட்டுள்ளன.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

இந்த வி8 மோட்டார் அதிகபட்சமாக 730 எச்பி பவரை 6700 – 6900 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். இதேபோல், 800 என்எம் டார்க்கை 2000 – 6000 ஆர்பிஎம்மில் வெளியேற்றும். ஏஎம்ஜி ஜிடி பிளாக் சீரிஸ் ஓர் அதி-திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட வாகனம் என்பதை உறுதிப்படுத்த இந்த திறன்வெளிப்பாடுகள் சான்றாக உள்ளன.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

இதுமட்டுமின்றி, இக்கார் வெறும் 3.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தையும், 9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 200 கிமீ வேகத்தையும் எட்டக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய சூப்பரான பவரை 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் வாயிலாகவே அது வெளியேற்றுகின்றது.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

பிளாக் சீரிஸ் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஸ்பெஷல் மாற்றங்களில் ஒன்றாக காயில்-ஓவர் சஸ்பென்ஷன் செட்-அப் பயன்படுத்தப்பட்டிருப்பது உள்ளது. இந்த செட்-அப் அடாப்டீவ் டேம்பிங் மற்றும் மேனுவல் அட்ஜஸ்ட்மென்ட் வசதிகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், பிரேக்கிங் அம்சத்தையும் மெர்சிடிஸ் நிறுவனம் அப்கிரேட் செய்திருக்கின்றது.

இந்தியருக்காக தானே முன் வந்து காருக்கான சாவியை வழங்கிய பென்ஸ் நிறுவனத்தின் எம்டி... காரோட விலையை கேட்டு அசந்துபோன மக்கள்!

செராமிக் காம்பவுண்ட் பிரேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், செலக்டபிள் 9 ஸ்டெப் டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்களும் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர காரின் கவர்ச்சியை மெருகேற்றும் பணிகளையும் மிக தாராளமானதாக மெர்சிடிஸ் இக்காரில் மேற்கொண்டிருக்கின்றது.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube