காஞ்சிபுரம் அருகே நாய் கடித்து புள்ளிமான் சாவு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே  பொன்னேரி கரை பகுதியில் உள்ள திம்மசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பகுதி 2 குடியிருப்பு உள்ளது. அது குடியிருப்பை ஒட்டி காடு போல மரம் முட்செடிகள் வளர்ந்துள்ளது. இதில் புள்ளிமான்கள் காட்டுப்பன்றி முயல் கீரி பிள்ளை உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அந்த பகுதியில் தண்ணீர் தொட்டி  இருப்பதால் தண்ணி குடிக்க புள்ளிமான்கள் வருவது வழக்கம். அந்த வகையில்   நேற்று காலை தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் ஒன்றை  நாய் கடித்து உள்ளது.. இதுகுறித்து குடிசை மாற்று வாரிய பொறுப்பாளர் ஜஸ்டின் ராஜ் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் மற்றும்  கிராம நிர்வாக அலுவலர் திம்மசமுத்திரம் வருவாய் அலுவலர் பத்மாவதி  வன அலுவலர் ராமதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த புள்ளிமான் எங்கிருந்து வருகிறது. யாராவது நாயை விட்டு கடிக்க விட்டார்களா, அல்லது நாய் கடித்து தான் இறந்ததாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பினனர் புள்ளிமானை வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube