பாஜ பற்றி குறை கூற பொன்னையனுக்கு தகுதியில்லை போலீஸ் ரெய்டுக்கு பயந்து அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை: பாஜ துணைத்தலைவர் வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு


ராசிபுரம்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பயந்து, அதிமுகவினர் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தமிழக பாஜ மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜ – அதிமுக தொடர்ந்து நண்பர்களாக உள்ளோம். எங்களிடையே எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அக்கட்சியின் கூட்டமொன்றில் காவிரி-முல்லைப் பெரியாறு – மேகதாது மற்றும் மொழிக்கொள்கை ஆகிய பிரச்னைகளில், பாஜ இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது என கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, இப்பிரச்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து போராடியும் வருகிறார். ஆனால், அதிமுகவில் தற்போது 65 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக, சட்டசபையில் அவர்கள் பேச வேண்டும். ஆனால், தங்கள் மீது ரெய்டு வரும் என பயப்படுவதால், அது குறித்து பேசாமல் உள்ளார்கள். எனவே, பாஜவை பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ குறை கூற, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.   மேலும், இலங்கை தமிழர் பிரச்னையில் பாஜ தலைவர் அண்ணாமலை, ஒரு பார்வையாளராக இருந்து கொண்டிருக்க மாட்டார். அப்பிரச்னையை தீர்க்க ஒன்றிய பாஜ அரசு அவரை இலங்கைக்கு அனுப்பியது.  இவ்வாறு அவர் கூறினார். ஊட்டியில்  பாஜ மாநில பொது  செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுகவினர் பாஜவை குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரை வேக்காட்டுத்தனமாக அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்றார்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube