Ponniyin Selvan 1 Review:பொன்னியின் செல்வன் 1 முதல் பாதி எப்படி? டிவிட்டர் விமர்சனம்! – பொன்னியின் செல்வன் 1 விமர்சனம்: பொன்னியின் செல்வன் முதல் பாதி எப்படி இருக்கிறது


பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தின் முதல்பாதி குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பொன்னியின் செல்வன்

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு அதே பெயரிலேயே பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா. ஐஸ்வர்யலக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

‘அந்த’ வார்த்தையை ரவீந்தர் சொன்னதே இல்லையாம்!

பாஸிட்டிவ் விமர்சனங்கள்

94545961

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தின் முதல் பாகம் இன்று தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சி காலை 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் படத்தின் முதல் பாதி குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருப்பதாக பாஸிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

மணிரத்னம் மேஜிக்

94545956

ஃபிலிம் அனாலிஸ்டான ரமேஷ் பாலா பதிவிட்ட டிவிட்டில், #PS1 முதல் பாதி: காவிய விகிதாச்சாரத்தின் உன்னதமான ஒன்று உங்கள் கண்களுக்கு முன்னால் விரிகிறது. இயக்குனர் மணிரத்னம் மேஜிக் செய்திருக்கிறார்.. என்ன கதையும் திரைக்கதையும்.. நடிகர் கார்த்தி புத்திசாலித்தனமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறார். அவரே பெரும்பாலான திரையை ஆக்கிரமிக்கிறார். சியான் விக்ரம் அவரது கதாபாத்திரத்தை வாழ்ந்திருக்கிறார்.. இடைவேளைக்கு முந்தைய அவரது நடிப்பு தீயாய் இருக்கிறது என கூறியுள்ளார்.

நயன்தாராவை பின் தொடரும் மகாலட்சுமி: விடாமல் நயன்தாராவை காப்பியடிக்கும் மகாலக்ஷ்மி… ‘அதை’ கவனிச்சீங்களா?

எதிர்பார்த்ததை விட அதிகம்

94545960

ரமேஷ் பாலா பதிவிட்ட மற்றொரு டிவிட்டில், #PS1 முதல் பாதி: அழகு மற்றும் திறமை நிறைந்த ஐஸ்வர்யா ராய் பச்சனால் மட்டுமே மயக்கும் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க முடியும். நடிகை த்ரிஷா குந்தவை போல் கம்பீரமாக உள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை ஆஹா.. இரண்டாம் பாதியில் ஜெயம் ரவியை காண காத்திருக்கிறேன். இதுவரை நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது.. என குறிப்பிட்டுள்ளார்.

நன்றாகவே செல்கிறது

94545959

இதேபோல் திரை விமர்சகரான லக்ஷ்மி காந்த் பதிவிட்ட டிவிட்டில், #பொன்னியின் செல்வன் முதல் பாதி: – பெரிய நட்சத்திர நடிகர்களுடன் ஒவ்வொரு காட்சியிலும் நாடகம் எதையாவது வழங்குகிறது. #கார்த்தி ஜொலிக்கிறார். #மணிரத்னத்தின் மேக்கிங் ஃபயர். காட்சிகள் & கலை வேலை சூப்பர்ப். #ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பெரிய பிளஸ். திரைக்கதை தீயாய் இருக்கிறது. சில டிராப்களைத் தவிர இதுவரை நன்றாகவே செல்கிறது… என குறிப்பிட்டுள்ளார்.

சரியான தழுவல்

94545957

முதல் பாதி குறித்து செய்தியாளர் ரிச்சர்ட் மகேஷ் பதிவிட்ட டிவிட்டில், #பொன்னியின் செல்வன் முதல் பாதி – இதுவரை சரியான தழுவல். #நந்தினி சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் உண்மையான மோதலை நிறுவுவதற்கு இந்த மணிநேரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. #ARRahman குறிப்பாக நந்தினி பகுதிகளுக்கு BGM மூலம் ஆன்மாவை மேம்படுத்துகிறார். குந்தவை மற்றும் நந்தினியுடன் வந்தியத்தேவனின் சந்திப்புகள் என்று ஹார்ட்டினை குறிப்பிட்டுள்ளார்.

டீசன்ட் ஃபர்ஸ்ட் ஹாப்

94545958

இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் வெங்கி பதிவிட்ட டிவிட்டில், #பொன்னியின் செல்வன் டீசன்ட்டான முதல் பாதி. இதுவரை இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கதையால் இயக்கப்பட்டது, இது சுவாரஸ்யமாக உள்ளது ஆனால் இப்போது வரை எந்த உணர்ச்சிகரமான உயர்வும் இல்லை. காட்சிகள், பாடல் காட்சிகள், இசை நன்றாக இருக்கிறது. கார்த்தி இதுவரை தனித்து நிற்கிறார். ஒரு பெரிய இரண்டாம் பாதி காத்திருக்கிறது! #PS1 #பொன்னியின்செல்வன்1 என குறிப்பிட்டுள்ளார்.

AR Rahman’s Sister Raihanah: மன்னிப்பு கேட்கலன்னா கிரிமினல் கேஸ் போடுவேன்… பயில்வானுக்கு ஏஆர் ரஹ்மான் சகோதரி வாரினிங்!Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube