விமான நிறுவன ஊழியர்களின் நடத்தை குறித்து பூஜா ஹெக்டே கோபமான ட்வீட் – தமிழ் செய்திகள்


இது உண்மையிலேயே ரொம்ப மோசம் என நடிகை பூஜா ஹெக்டே தனது டுவிட்டரில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது மூன்று பெரிய நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸானால் அவருடைய மார்க்கெட் இந்த வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

pooja090622 2

இந்த நடிகை பூஜா ஹெக்டே தனக்கு விமான பயணத்தில் நேர்ந்த ஒரு வருத்தமான சம்பவத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து புறப்படும் விமானத்தில் நாங்கள் பயணம் செய்தபோது அந்த விமானத்தின் ஊழியர் தங்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

விபுல் நகாஷே என்ற அந்த ஊழியர் எங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார் என்றும் அவர் முற்றிலும் திமிர் பிடித்தவராக என்றும் கூறினார். முழுக்க முழுக்க அச்சுறுத்தும் தோனியில் அவருடைய பேச்சு இருந்தது என்றும் எந்த காரணமும் இல்லாமல் எங்களிடம் கோபப்பட்டார் என்றும் தெரிவித்த பூஜா, பொதுவாக இதுபோன்ற பிரச்சனைகளை நான் பொதுவெளியில் பகிர்வது இல்லை என்றும் ஆனால் இது மிகவும் மோசமான மோசமாக இருந்ததால் தான் பதிவு செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

pooja090622 3

தனியார் விமான நிறுவன ஊழியர் குறித்து நடிகை பூஜா ஹெக்டே பதிவு செய்துள்ள இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube