பிரக்ஞானந்தா சாம்பியன் – நியூஸ்18 தமிழ்


நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரின் சாம்பியன் ஆனார் யாங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா. 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். 16வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா இந்த செஸ் தொடர் முழுவதும் செம பார்மில் இறந்தார்.

இந்தியாவின் பிரணீத்தை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா கருப்பு நிறக் காய்களில் அசத்தி 49வது நகர்த்தலில் வெற்றி கண்டார். இதன் மூலம் ஒட்டுமொத்த 9 சுற்றுகளில் 6 வெற்றி, 3 டிரா என்று தோல்வி காணாத பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.2.59 லட்சம் பரிசு கிடைத்தது, பிரணீத் 7ம் இடத்தில் முடிந்தது.

சாம்பியன் ஆனவுடன் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இந்தத் தொடரில் என் ஆட்டத்தின் தரம் உயர்ந்ததாக இருந்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் திட்டமிட்டபடி காய்களை நகர்த்த முடிந்தது. இது எனக்கு திருப்தி அளித்தது” என்றார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் பெரிய ஆட்களுடன் மோதி வெற்றி பெற்று 2ம் இடம் பிடித்தது பிரக்ஞானந்தாவின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. கடைசியில் டிங்கிற்கு எதிராக தோற்றார். “டாப் பிளேயர்களான கார்ல்சன், லிரன் மற்றும் பலருடன் மோதுவது நம்பிக்கையை வளர்த்தது. என்னுடைய தயாரிப்பாளரின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக ஆடுகிறேன்” என்கிறார் பிரக்ஞானந்தா.

செஸ்ஸபிள் செஸ் தொடரின் போது தனது 11ம் வகுப்புத் தேர்வுகளுக்கும் தயார் படுத்திக் கொண்டு செஸ் உலகின் மாஸ்டர்களுக்கு எதிராகவும் தயார்படுத்தும் இரட்டை சுமை இருந்தது பிரக்ஞானந்தா, ஆனால் இந்த இளம் ஜீனியஸுக்கு சவால் என்பது கரும்பு போல்தான்.

செஸ் ஒலிம்பியாடில் இந்திய ‘பி’ டீமுக்குத் திரும்புகிறார் பிரக்ஞானந்தா.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube