Pranitha Subhash: கையில் குழந்தையுடன் குட் நியூஸ் சொன்ன சூர்யா, கார்த்தி பட நடிகை: குவியும் வாழ்த்துக்கள்.! நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது


கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணிதா. அதன் பிறகு கார்த்தி ஜோடியாக சகுனி படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் ரசிகர்களுக்கு குட்நியூஸ் ஒன்றை கூறியுள்ளார் பிரணிதா.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்தார் பிரணிதா. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

திருமணத்துக்குப் பின்னரும் படங்களில் நடித்து வந்த பிரணிதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரின் பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.

தனுஷ்: தனுஷுக்கு கிடைத்துள்ள புது கேர்ள் பிரெண்ட்.. யாருன்னு பாருங்க.!

அதனை தொடர்ந்து கடந்த மாதம் இவரின் வளைகாப்பு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை பிரணிதாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube