அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ப்ரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வயித்தெரிச்சலுக்கு ஆளாக்குவார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’நான் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததால் திருமணம் தள்ளிப் போய்விட்டது’ என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரியா பவானி ஷங்கர் தற்போது அருண் விஜய்யின் ’யானை’ தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ ஜெயம் ரவியின் ’அகிலன்’ எஸ்ஜே சூர்யாவின் ’பொம்மை’ சிம்புவின் ’பத்து தல’, கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.