மரக்காணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை


மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கந்தாடு ஊராட்சி பிளாரிமேடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது. இதனால் இவர்களுக்கு கந்தாடு பழைய தெருவில் உள்ள ஏரியில் இருந்து தினமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், பைப் லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இவர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் மரக்காணம்- திண்டிவனம் சாலை பிளாரிமேடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, கந்தாடு ஊராட்சி தலைவர் வெங்கடேசன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் வழங்கினால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மரக்காணம்- திண்டிவனம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube