உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை களங்களை தேர்வு செய்து நடிக்கும் ராதிகா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் திறமைக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் திறமையை விட அழகுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பெண் இளமையாக இருக்கும் போது அவளுக்கு வாய்ப்புகள் வருகின்றன.
ஒரு நடிகை 30 வயதை கடந்து விட்டால், அவளின் உடல் தோற்றம் கேலிக்குள்ளாகிறது. பட வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. இதில் சில நடிகைகள் 30 வயதுக்கு மேல் சினிமாவில் நடித்தால், அவருக்கு வயதாகிவிட்டது என்று குரல் கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் தான் பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து உடலை இளமையாக வைத்துள்ளனர்.
நான் ஒப்பந்தமாகி இருந்த பல படங்களில் என்னை நீக்கிவிட்டு, மற்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்கிறேன். இதனால், பல பட வாய்ப்புகள் என்னை விட்டு சென்றுவிட்டன. இதனால், நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். சினிமாவில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் பல திறமையான நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாக ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.