ராஸ்ஜ்தான் மாநிலத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று அரசறிவியல் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது.இதில்,
- காங்கிரஸ் கட்சி ஒரு கருத்து ரீதியான மற்றும் சமூக அரசியல் ரீதியான கூட்டமைப்பு என்பதை விவரி?
- 1984 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை?
- முதல் மூன்று மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி அதிக செல்வாக்குடன் இருந்தது?
- எத்தகையதொரு சூழலில் காங்கிரஸ் கட்சி 1967 மக்களைவைத் தேர்தலை எதிர்கொண்டது.
- 1971 மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சியின் மீட்சிக்கு உதவுவதாக அமைந்தது. விவரி?
- கரீபி ஹட்டாவோ (வறுமையை விரட்டு) என்ற முழக்கத்தை யார் கொடுத்தது?
போன்ற கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக, அரசறிவியல் வினாத்தாளில் இத்தகைய கேள்விகள் இடம்பெறுவது இயல்பானது தான் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில், ஒற்றை கட்சி முறையும், காங்கிரஸ் கட்சி அமைப்பும் (DOminance of One Party and Congress System) என்ற பகுதியம் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பாராளுமன்ற அரசாங்க முறையின் வளர்ச்சியோடு காங்கிரஸ் கட்சியின் பங்கு இன்றியமையாததாக விளங்குகிறது என்றாலும், வினாத்தாளில் கேட்கப்பட்ட தோரணை ஒருதலை சார்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது.
படிக்கின்ற மாணாக்கர்களிடம் ஒருவிதமான குழப்பத்தையும், கட்சி பாகுபாடையும் ஏற்படுத்துவதாக அமையும் என்று கல்வியலாளர்கள் கருதுகின்றனர். ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் செல்வாக்கினைப் பாதுகாக்கும் வேலையை தேர்வுத்துறை செய்து வருவதாக எதிர்க்காட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்ற்னர்.
இந்தியாவில், தேர்வு வினாத்தாளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெறுவது வாடிக்கையாகி விட்டது. கடந்தாண்டு, மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற உயர்க்கல்வித் தேர்வில், நான்கு மதிப்பெண் கொண்ட கேள்விப் பிரிவில், பாரதிய ஜனதா கட்சியின் சின்னத்தை வரையுமாறு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும், தேசிய கட்டமைப்பில் ஜவஹர்லால் நேரு கொண்டிருந்த நான்கு எதிர்மறையான அம்சங்கள் என்ன? என்றும் கேட்கப்பட்டிருந்ததது.
எனவே, தேர்வுக்கான வினாத் தாள்களை தயார் செய்வதற்கு முன்பு, தனிப்பட்ட அரசியல் கட்சியின் கொள்கையை மட்டும் அடையாளப்படுத்தும் விதமான கருத்துகள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற கல்வியலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.