90 நொடிகள் வரை ரீல்ஸ் பதிவு செய்யலாம்; ரீல்ஸ் தளத்தில் புதிய அம்சங்களை சேர்த்த இன்ஸ்டா | இன்ஸ்டாகிராம் ரீல் காலத்தை 90 வினாடிகளுக்கு நீட்டிக்கிறது, மேலும் அம்சங்களைச் சேர்க்கிறது


போட்டோ ஷெரிங் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், ரீல்ஸில் புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. ரீல்ஸின் நேரத்தை 90 நொடிகள் வரை நீட்டித்துள்ளது அதில் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 2020 வாக்கில் ஷார்ட் வீடியோ தளமான ரீல்ஸ் (பிளாட்பார்மை) அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே சமூக வலைதள பயனர்கள் மத்தியில் இதற்கு ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. அசல் கன்டென்ட் கிரியேஷனுக்காக இந்த தளத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்வதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அப்போது முதலே பல்வேறு அம்சங்களை ரீல்ஸ் தளத்தில் சேர்த்து மேலும் மெருகேற்றி வரும் பணியை சிறப்பாக செய்து வருகிறது மெட்டா நிறுவனம்.

இந்நிலையில், இப்போது ரீல்ஸின் நேரத்தை 90 நொடிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 60 நொடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அப்டேட்டை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்ளிகேஷன் ஸ்டோர்களில் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய அம்சத்தை பயனர்கள் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெம்ப்ளட்ஸ், இன்டராக்ட்டிவ் ஸ்டிக்கர்ஸ், புதுவிதமான பிரெஷ் சவுண்ட் எஃபெக்ட்ஸ் போன்ற அம்சங்களையும் ரீல்ஸ் தளத்தில் சேர்த்துள்ளது இன்ஸ்டா. இந்த எக்ஸ்ட்ரா டைமை பயனர்கள் தங்கள் விருப்பத்துக்கு தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வலைப்பதிவு பதிவில் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஆம்பர் என்ற அலார்ட் அம்சத்தை இன்ஸ்டா தளம் சேர்ந்தது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணாமல் போன குழந்தைகள் குறித்த விவரத்தை பார்க்கவும், அது சார்ந்த அறிவிப்பை பகிரவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக் தளத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வந்துள்ள நிலையில் இன்ஸ்டா இதனை செய்துள்ளது.





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube