தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான அரவிந்த்சாமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் சாமி நடிப்பில் உருவான ‘கள்ளபார்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்ததோடு, ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது ஜூன் 24-ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் தேதி என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபாண்டியின் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகிய இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் படக்குழுவினர் தொடங்க தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.