ஜானகிபுரம் ஊராட்சியில் இடிந்து விழும்நிலையில் பயணியர் நிழற்குடை: புதிதாக கட்டித்தர கோரிக்கை


மதுராந்தகம்,  மே 10: ஜானகிபுரம் ஊராட்சியில்,  இடியும் நிலையில் உள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிதாக கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் ஒன்றியம் ஜானகிபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் ஓரளவிற்கு டவுன் பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இந்த ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லுவது வழக்கம். இங்கு, பஸ் நிறுத்தம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது, வரை புழக்கத்தில் உள்ளது. ஆனால், இந்த பயணிகள் நிற்பதற்கான கட்டிடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.இனிவரும் காலங்கள், மழை காலம் என்பதால் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.  இந்த கட்டிடமானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி,  இந்த பஸ் நிறுத்த கட்டிடத்தை அகற்ற வேண்டும்.   புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். விபத்து ஏதும் நிகழ்வதற்கு முன்னே நடவடிக்கை எடுப்பார்களா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube