தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகல்… கேப்டனாகிறார் ரிஷப் பந்த்.


இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதே போல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் பேட்டிங் பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டதால் அவரும் அணியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காயம் குணமடைந்த பின் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் தங்களது உடல் தகுதியை நிருபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் இந்த தொடரிலிருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: 13 டி20 போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனையை நோக்கி இந்தியா தீவிரம்

இந்திய அணி: ரிஷப் பந்த் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் குமார், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube