மாவீரன் என்று மக்கள் அழைக்கப்பட்ட குரு, பல சமூக சீர்திருத்தங்களை செய்துள்ளார். எதையும் எதிர்க்கும் துணிச்சல் மிக்கவராக இருந்த குரு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இதையடுத்து காடுவெட்டி குருவின் வீரமிக்க வாழ்க்கை வரலாறு காடுவெட்டி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் காடுவெட்டி குருவின் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார்.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சோலை ஆறுமுகம் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்தில் ஆர்.கே. சுரேஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு வசனங்கள் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. மொத்தத்தில் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: பிரத்தியேக தகவல்!