இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்… ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம் கியா நிறுவனம் 18,718 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் பட்டியலில் சொனெட் பிடித்துள்ளது. 7,899 சொனெட் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் செல்டோஸ் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 5,953 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்த பட்டியலில் கேரன்ஸ் கார் மூன்றாவது இடத்தையும், கார்னிவல் கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார்களின் நடப்பாண்டு மே மாத விற்பனை எண்ணிக்கை முறையே 4,612 மற்றும் 239 ஆக உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 5 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இதில், 4 கார்களை மேலே பார்த்து விட்டோம். 5வது காரான இவி6 இன்றுதான் (ஜூன் 2) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எலெக்ட்ரிக் கார் ஆகும். இன்னும் சொல்லப்போனால் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். ஆனால் இது பிரீமியம் எலெக்ட்ரிக் கார் என்பதால் விலை மிகவும் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

நடப்பாண்டு மே மாதம் கியா இந்தியா நிறுவனம் 15 இவி6 எலெக்ட்ரிக் கார்களை டீலர்ஷிப்களுக்கு அனுப்பியுள்ளது. அவை டிஸ்ப்ளே கார்களாக பயன்படுத்தப்படும். ஒட்டுமொத்தமாக நடப்பாண்டு மே மாதம் கியா நிறுவனம் 18,718 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதவிர நடப்பு 2022 காலாண்டர் ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஜனவரி-மே) ஒட்டுமொத்தமாக 97,796 கார்களை விற்பனை செய்துள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

கடந்த 2021ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியாகும். அத்துடன் இந்திய சந்தையில் 4.50 லட்சம் கார்கள் விற்பனை என்ற பிரம்மாண்டமான மைல்கல்லையும் கியா நிறுவனம் கடந்த மே மாதம் கடந்துள்ளது. அத்துடன் சொனெட் காரும் 1.50 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்து அசத்தியுள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

கியா நிறுவனத்தின் சொனெட் காரானது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தையும், செல்டோஸ் காரானது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தையும் சேர்ந்தது. அதே நேரத்தில் கார்னிவல் காரானது சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்தது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் காரானது, எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களின் கலவையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்த அனைத்து கார்களுக்குமே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா நிறுவனத்தின் இவி6 எலெக்ட்ரிக் காருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விலை உயர்ந்த காராக இருந்தாலும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பை வழங்குவதுதான் இந்த எதிர்பார்ப்பிற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

இந்திய சந்தையில் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 59.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 64.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

வரும் காலங்களில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய சந்தைக்கு என பிரத்யேகமான எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் கியா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய சந்தையில் கியா கார்களின் விற்பனை அமோகம்... ஒரே மாசத்துல இவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கா?

கியா நிறுவனம் தற்போது புத்தம் புதிய இவி6 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு தயாராகி வருகிறது. கூடிய விரைவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube