நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் லேட் நைட் டேட்டிங் செல்வதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் ‘சாகுந்தலம்’ ‘யசோதா’ மற்றும் ‘குஷி’ ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து இவ்வாண்டு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக வரும் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது நெருங்கிய நண்பர்களான ப்ரிதம் ஜூகல்கர் மற்றும் சாதனை சிங்ஆகியோர் உள்ளனர். தனக்கு நெருக்கமான இந்த நண்பர்களுடன் லேட் நைட்டில் தான் டேட்டிங் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.