துணிவு அப்டேட்டை வெளியிட்ட சமுத்திரக்கனி… அஜித் ரசிகர்கள் உற்சாகம்..


துணிவு படத்தின் அப்டேட்டை படத்தில் இடம்பெற்றுள்ள சமுத்திரக்கனி இன்று வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்ட புதிய படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித், எச்.வினோத், போனி கபூர் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவ்னி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து கிரைம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான திரைக்கதை.. சூப்பர் கான்செப்ட்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய 10 படங்கள்!

8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகுவதால் இந்தப் பொங்கல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தள புகைப்படங்கள், நடிகர் சமுத்திரக்கனி இன்று வெளியிட்டுள்ளார். இயக்குனர் எச். வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுடன் அவர் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube