காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில்
அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லும் வழியில் பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலணியை வீசினர்.இச்சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சியை சேர்ந்த கோபிநாத், ஜெயகிருஷ்ணா, முகமது யாகூப் உள்ளிட்ட 6 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 6 பேரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய விவகாரம்: ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது!
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில், நள்ளிரவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்கு சென்ற மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை என்றும், இனி பாஜகவில் தொடர விரும்பவில்லை எனவும் கூறினார். இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.