இந்த டிஜிட்டல் திட்டத்தின் மூலம் கணிதம் மற்றும் மொழி பாடங்களுக்கான தரமான முறையில் கற்பிக்கப்படும் . பெற்றோர் மற்றும் மாணவர்கள் learn.khanacademy.org/upschool என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்கள், பாடத் திட்ட அணுகலுக்கான வாட்ஸ்அப் இணைப்பை பெறுவார்கள்.
1 முதல் 10 வகுப்புக்குள் உள்ள குழந்தைகளின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்தார். வசதி வாய்ப்பற்ற, மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் கணிதறிவு, மொழியறிவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கதைகள் மூலமாகவும், மகிழ்ச்சியான விளையாட்டு அனுபவங்கள் மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு கல்வியுடன் கூடிய நடனம், யோகா போன்ற பிற செயல்பாடுகளும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அதீநவீன ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ தொடங்கப்படும் : கல்வி அமைச்சர்
எஸ்பிஐ நிதி மேலாண்மை லிமிடெட் நிர்வாக அதிகாரி வினய் எம். டான்சே இதுகுறித்து கூறுகையில், ” இது மாணவர்களுக்கு தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். கான் அகாடெமி (khan Academy) நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.