திரை விமர்சனம்: விக்ரம் | விக்ரம் திரைப்பட விமர்சனம்


தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகள், முகமூடி அணிந்த ஒரு குழுவால் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். பொதுவெளிக்கு தெரியாமல், அக்கொலைகளின் பின்னிருப்பவர்களை புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏஜென்ட் அமர்(பகத் பாசில்) தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கிறார் காவல் துறை தலைவர் ஜோஸ் (செம்பொன் வினோத்). கொலைகளுக்கான காரணம், பின்னணி என்ன? கொலைகளை செய்தவர்களின் மூளையாக செயல்பட்டது யார் என்பதையெல்லாம் புலனாய்வில் அமர் குழுவினர் கண்டுபிடித்தனரா, இல்லையா என்பது கதை.

கொலையாளிகளின் குடும்பத்தினரையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அமர் குழுவினர் தேடிச் சென்று விசாரிக்கும் காட்சிகள் பாதி படத்தை நிறைவாக்குகின்றன. விசாரணையின் முடிவில், முக்கிய மூளையாக இருப்பது யார் என்பது தெரிந்த விடையாக இருப்பதால் ஏற்படும் அயர்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், விசாரணைக்கு நடுநடுவே அமரின் காதலும், அவரது திருமணமும் உருவாக்கும் உணர்வுபூர்வ அழுத்தம், முன்னாள் ‘ரா’ அதிகாரி விக்ரமின் (கமல்) அறிமுக சண்டைக் காட்சி ஆகியவை, ரசிகர்களை இரண்டாம் பாதித்த எதிர்பார்ப்பில் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது எஞ்சிய படம்.

விஜய்சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி கலைஞர்களுக்கு, கமல் படத்தில் கொடுத்திருக்கும் ‘திரை வெளி’ என்பது, கண் துடைப்பாக இல்லாமல் முழுமை கொண்டதாக இருக்கிறது. முதல் பாதி படத்தைபகத் பாசில் ஏந்திக்கொள்வதும், விஜய்சேதுபதி கதாபாத்திரத்துக்கான ‘அறிமுகம்’ தொடங்கி, அதன் தனித்துவம் ‘மாஸ் அப்பீலுடன்’ துலங்குவது வரை இந்தப் படத்தின் சாத்தியமாவது கமலின் பரந்த பார்வையால்தான்.

‘கிளைக் கதை’ உத்தியை எடுத்தாண்டு, ஏற்கனவே பிரபலமான ஒருகதாபாத்திரத்தின் நீட்சியாக, கமலின்வயதுக்கும் அவருடைய முதிர்ச்சியான தோற்றத்துக்கு ஏற்ப ‘விக்ரம்’கதாபாத்திரத்தை புதிய களத்தில் வெற்றிகரமாக ‘மீள்’ வார்ப்பு செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.அதேபோல, படத்தின் தொடர்ச்சிக்கான முன்மொழிதலையும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார்.

சொந்த இழப்பை கடந்து, போதைப்பொருள் பரவலைத் துடைத்தெறிய ‘அசுர’ மனநிலையில் நின்று வேட்டையாடும் முன்னாள் ‘ரா’ அதிகாரியாக,தனது வயதுக்குரிய முதிர்ச்சியை ஊதித் தள்ளிவிட்டு நடிப்பில் புகுந்து விளையாடுகிறார் கமல்.

பகத் பாசில் பார்வைகள் வழியாகவே மிரட்டினால், சந்தானம் என்கிற போதைப் பொருள் பயன்படுத்தும் கொழுத்த மாபியா ஒருவனின் விறைப்பான உடல்மொழியைக் கொண்டுவந்து, தனது ‘அண்டர் பிளே’ நடிப்பின் முன்மாதிரியை மீண்டும் பதிந்துவிட்டுப்போகிறார் விஜய்சேதுபதி. சில காட்சிகளே வந்தாலும் காயத்ரி சங்கரும், ஏஜென்ட் டீனாவாக வரும்பெண்மணியும் மனதில் தங்குகின்றனர்.

போதைப் பொருள் மாஃபியாவை பின்னணியாகக் கொண்ட கதைக் களத்தில், அதன் பரவலால் விளையாடக்கூடிய சமூகச் சீர்கேடு குறித்து, கமல் ஒருகாட்சியில் பேசுகிறார். அந்த பேச்சு தாக்கம் ஏற்படுத்துவதாக இல்லை. அதேபோல, போதைப் பொருள் ஒன்றைவாயில் போட்டுக் கடித்ததும் அரக்கத்தனமான வலிமை வந்துவிடுவதாக விஜய் சேதுபதி ஏற்றுள்ள கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பது போதைப் பொருளுக்கான விளம்பரம்போல உள்ளது.

16543130682006

காளிதாஸ் ஜெயராமின் மரணம் உருவாக்கியிருக்க வேண்டிய அழுத்தம், அதைத் தவறவிடுவது, கமலுக்கும்அவரது மகனுக்குமான உறவில் ஊடாடிய ரகசியம் பார்வையாளர்களைத் தொடாமல் போய்விடுவதும் திரைக் கதையின் பலவீனம்.

சண்டை, சேஸிங், ப்ளாஸ்டிங் உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகளின் பிரம்மாண்டம், வரிசை கட்டும் கொலைகள், இறுதியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தின் அறிமுகம், முன்பின் நானா கதை சொல்லலுக்குக் குழப்பம் ஏற்படுத்தாத படத்தொகுப்பு ஆகியவை படத்தில் மலிந்திருக்கும் ‘தர்க்க’ப் பிழைகளைக் கடந்து அடுத்தடுத்த காட்சிகளில் கண்களைப் பதித்து ஆக்ஷன் த்ரில்லராக விரியும் படம். அதற்கு சண்டை இயக்குநர்கள் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், பிலோமின் ராஜின் எடிட்டிங், பின்னணி இசை தந்திருக்கும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் கூட்டுழைப்பு மிரட்டலாக கைகொடுக்கிறது.

பாடல்களின் தேவையே இல்லாத பாடல்கள், இடைச்செருகலான 2 பாடல்களைத் தாண்டி, இந்நாள் படைப்பாளிகளுடன் இணைந்து கமல் தந்திருக்கும் அதிரடி ஆக்ஷன் பிளாக்குகளுக்காக ‘விக்ர’முக்கு வெல்கம் சொல்லலாம்!

16543131292006

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube