சென்செக்ஸ் 1,017 புள்ளிகள் இழப்பு- Dinamani


சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகளின் சரிவால் பங்குச் சந்தை இன்று இறக்கத்துடன் முடிவடைந்தது.

அமெரிக்க வங்கி மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக நிதிக் கொள்கையில் இறுக்கம் காட்டி வரும் நிலையில் சாவதேச அளவில் முதலீட்டாளர்களின் மந்தமான செயல்பாடுகளால் பங்குச் சந்தைகள் தொடா் சரிவை சந்தித்து வருகின்றன.

அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குகளை அதிகளவில் விற்று தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்றும் சாவதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகம் கண்டுள்ளது போன்றவை பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை கடந்த வார வர்த்தக முடிவில் கடும் சரிவைச் சந்தித்தது.

இந்நிலையில், இந்த வார இறுதியிலும் பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்று(ஜுன்-9) 55,320.28 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 54,760.25 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. காலை முதலே இறக்கத்தைச் சந்தித்த நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் 1,016.84 புள்ளிகள் குறைந்து 54,303.44 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.

16,478.10 புள்ளிகளில் முடிவடைந்து இன்று 16,283.95 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கிய நிஃப்டியும் இன்றைய வர்த்தக நேர முடிவில் 276.30 புள்ளிகளை இழந்து 16,201.80 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube