தொலைக்காட்சி தொடர் நடிகையான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பிரபலமான நிலையில் சற்றுமுன் அவர் சம்மர்லுக்கில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பிரபலமான ஷிவானி நாராயணனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக அவர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் அவரது கேரக்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ‘விக்ரம்’ படத்தில் அவர் ஒரு வசனம் கூட பேசாமல் ஓரிரு காட்சிகளில் மட்டும் மின்னல் போல வந்து மறைந்து விட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும் ‘வீட்ல விசேஷங்க’, ‘விஜய்சேதுபதியுடன் ஒரு படம், ‘பம்பர்’ மற்றும் வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவர் நடித்து வரும் நிலையில் அந்த படங்களில் அவருக்கு நல்ல கேரக்டர்கள் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி நாராயணன் சம்மர் ஸ்பெஷல் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.