ஸ்டார்ட்- அப் துறையில் அதிர்ச்சி – News18 Tamil


இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் புதிதாக தொழில் முனைவோர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் உலகம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் 8000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பிற தொடக்க காலத்தில் இருந்து தற்போது வரை 1.3 லட்சம் ஊழியர்களை ஸ்டார்ட் அப் நிறுவங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக layoffs.fyi என்ற இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.

தொற்று நோய்க்கு பிந்தைய காலத்திலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உற்பத்தி சதவீதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்கம், உயர் வட்டி விகிதம், ரஷ்யா படையெடுப்பு முதலான காரணங்களால் தொழிற்துறை முதலீடு குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய்த் தொற்று பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து பொருளாதார முடக்கம் காரணமாக தொழிலாளர் சந்தை பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டது. குறிப்பாக, கல்வித் துறையில் ஆன்லைன் மூலம் பல வகையான படிப்புகளையும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்குவதற்கு பல்வேறு கல்வித் தொழல்நுட்ப ஸ்டார்ட் நிறுவனங்கள் தோன்றின. 2021ல் UpGrad, Vedantu, Eruditus, Byjus, Unacademy உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி புதிய நிறுவனங்கள் (யூனிகார்ன்) அங்கீகரிக்கப்பட்டது. தற்போது, ​​இந்தியாவில் செயல்படும் ஸ்டார்ட் அப்-களில் 4457 நிறுவனங்கள் கல்வித் துறையுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று முடக்கநிலை முழுவதும் நீக்கப்பட்டு பள்ளி/கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படாமல் தொடங்கியுள்ளதால் கல்வி ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்கின்றன. முன்னதாக, ஆன்லைன் மூலம் படிப்புகளை வழங்கிய லிடோ நிறுவனம் 1200 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. Vedantu என்ற ஆன்லைன் டியூசன் நிறுவனம் கடந்த மே மாதம் 400க்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கியது. உதய் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது ஆன்லைன் கல்வி சேவையை முற்றிலும் நிறுத்துவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube