உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தற்போது தனது காதலர் சாந்தனுவுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் காதலரை திருமணம் செய்யாதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
‘காதலருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வரும் நீங்கள் ஏன் அவரை திருமணம் செய்யவில்லை என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘எனக்கு திருமணம் குறித்து பயமாக இருப்பதாகவும், அதனால்தான் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், ‘எனது அம்மா அப்பாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து விட்டதன் காரணமாக நான் அவ்வாறு யோசிக்கிறேன் என்று அர்த்தமில்லை, திருமணம் என்கிற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்றும், பயம் மட்டுமே இருக்கிறது என்றும் அதனால் திருமண பந்தம் குறித்து நான் நிறைய யோசித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சாந்தனு என்னுடைய வாழ்க்கைக்கு வந்தவுடன் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நிறைய விஷயங்கள் ஒத்துப் போகிறது என்றும், நான் இப்போது ஆசீர்வதிக்கப்பட்டவராக கருதுகிறேன் என்றும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.