உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய ஒரு கருத்துக்கு தற்போது படக்குழுவினர் பதில் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த நிலையில் ‘விக்ரம்’ திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் ‘கடவுள் இல்லனு சொல்லல, இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொல்றேன்’ என்று வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் மிகப் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு ‘மாயோன்’ படம் மூலம் பதில் கூறி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பதாவது: ‘தசாவதாரம்’ படத்தில் ‘கடவுள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்’ என்று கமல் வசனம் பேசிய நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு ‘மாயோன்’ படத்தில் பதில் சொல்லப்பட்டது. இதனால் ‘மாயோன்’ திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
“கடவுள் இருந்து நல்ல இருக்கு” என்ற 14 வருட நீண்ட கேள்வி #உலகநாயகன். அவரது கேள்விக்கு இறுதியாக பதில் கிடைத்துள்ளது. #மாயோன் உடன் காட்ட முடிவு செய்துள்ளது #விக்ரம் ஜூன் 3 ஆம் தேதி முதல் மாயோனின் தியேட்டர் டிரெய்லர்.#ஆண்டவர் @மாணிக்கம்மொழி @இளையராஜா @சிபி_சத்யராஜ் @நடிகர்தன்யா #கே.எஸ்.ரவிக்குமார் pic.twitter.com/DX7cxRHXnD
— இரட்டை அர்த்த தயாரிப்பு (@DoubleMProd_) ஜூன் 1, 2022