signs of health problems: உடம்பில் இந்த அறிகுறிகள் வந்தால் இது என்ன நோய்களின் அறிகுறி… தெரிஞ்சா வரும்முன்னே தடுக்கலாம்…


நம் உடலில் ஏற்படும் எல்லா வகை மாற்றங்களும் சில நோய்க்குறிகளின் சமிக்ஞைகள் தான். என்ன… சில சமிக்ஞைகள் சிறிய பிரச்சினையின் அறிகுறியாகவும் சில சமிக்ஞை பெரிய பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கும்.

நாம் வழக்கம்போல இது சின்ன பிரச்சினை தான் என்று நினைத்துக் கொண்டு கடந்துவிடுவோம். ஆனால் பின்னாளில் அது பெரிய பிரச்சினையில் கொண்டு போய் விடும். அப்படிப்பட்ட சில நோய்களும் அதற்காக உடல் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளையும் பற்றி இங்கே பார்க்கலாம்.

​கடகடவென உடல் எடை குறைதல்

தீவிரமாக டயட்டை பின்பற்றி அதனால் எடை குறைவது வேறு. ஆனால் அதிகப்படியான உடற்பயிற்சி, தீவிரமாக டயட்டைப் பின்பற்றுவது என எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை அதிகமாகக் குறைந்தால் இது ஆபத்து தான். அது நிச்சயம் உடலுக்குள் இருக்கும் வேறு ஏதாவது தீவிரமான பிரச்சினையின் அறிகுறியாகத் தான் இருக்கும்.

டயட், உடற்பயிற்சி என எதுவும் இல்லாமல் ஒரு வருடத்திற்கு 4 கிலோ வரை குறைந்திருந்தால் அது இயல்பான ஒன்று தான். அதைவிட அதிகமாக எடை குறைந்தால் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

திடீரென காரணமே தெரியாமல் உடல் எடை அதிகமாகக் குறைந்தால் அது தைராய்டு, தீவிர மன அழுத்தம், நீரிழிவு, கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். முதலில் ரத்தப் பரிசோதனை மூலம் ரத்த சர்க்கரை மற்றும் தைராய்டு பரிசோதனைகள் எடுப்பது நல்லது.

பசியின்மை

samayam tamil

நம்மில் நிறைய பேருக்கு இந்த பிரச்சினை உண்டு. அதற்குக் காரணம் உணவு இடைவெளிக்கு இடையே நிறைய நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தான் காரணம் என நினைக்கிறோம்.

நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு கொஞ்சமாகச் சாப்பிட்டதும் வயிறு முழுதாக நிரம்பியது போல தோன்றும். வயிறும் பெரிதாக இருக்கும்.

இது குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். வயிறு உப்பசம், வாயு பிரச்சினைகள் ஆகியவை தான் குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கின்றன.

உடம்புல இருக்கிற கெட்ட கொலஸ்டிராலை வெளியேத்தணுமா… இந்த டயட் பிளான் ஃபாலோ பண்ணுங்க…

​மூச்சுத் திணறல்

samayam tamil

மூச்சுப் பிரச்சினைகளில் பல வகைகள் உண்டு, குறுகிய மூச்சு, மூச்சுக் காற்று வெளியேறுவதில் சிரமம் என பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை நுரையீரல் தொடர்புடையவை தான்.

இந்த ஷார்ட் ப்ரீத் பிரச்சினை இருப்பவர்கள் குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள்ளாக நுரையீரல் பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.

பொதுவாக இந்த ஷார்ட் ப்ரீத் ஏற்படுவதற்கு உடல் பருமன், அதிகப்படியாக உடற்பயிற்சி செய்வது, புகைப்பிடித்தல் போன்றவை தான் மிக முக்கியக் காரணமாக இருக்கின்றன.

தொண்டைக் குழாயில் ஏற்படும் அழற்சி, ஆஸ்துமா, நுரையீரலில் ரத்தம் உறைதல், நுரையீரல் பகுதியில் சளி கட்டிக் கொண்டிருப்பது போன்ற பிரச்சினைகளின் அறிகுறியாக இந்த ஷார்ட் ப்ரீத் இருக்கலாம்.

​பெருங்குடல் புற்றுநோய்

samayam tamil

சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கூறப்படுகிறது.

இந்த பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறியே மலச்சிக்கல் பிரச்சினை தான். மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, குறிப்பாக சாப்பிட்டதும் ஏற்படும் வயிற்று வலி, மலத்தில் ரத்தம் வெளியேறுவது ஆகியவை பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். இதை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டால் புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பாகத் தடுத்துவிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட வேண்டிய அகத்திக்கீரை சூப்… கசக்காமல் எப்படி செய்வது?…

​மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்

samayam tamil

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டங்களில் அல்லது மெனோபஸ் காலகட்டங்களில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக மனநிலை மாற்றங்கள் உண்டாகும்.

அதைத் தவிர மற்ற நேரங்களில் திடீர் ஞாபக மறதி, சிந்திப்பதில் திடீர் மாற்றம், கவனச்சிதறல், நடவடிக்கைகளில் காணப்படும் மாறுபாடு ஆகியவை மனநலப் பிரச்சினைகளின் அறிகுறியாகும்.

இதுபோன்ற அறிகுறிகள் உண்டாகும்போது ஆரம்பகட்டத்திலேயே உளவியல் நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

​காய்ச்சல்

samayam tamil

பொதுவாக எல்லா பருவ காலங்களிலும் சிலருக்கு உடலின் வெப்பநிலை அடிக்கடி உயர்ந்து கொண்டே இருக்கும். அது லேசான காய்ச்சல் என்று மருந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள்.

சிலரோ சூட்டு உடம்பு என்று சொல்லி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் உடலின் வெப்பநிலை இப்படி அடிக்கடி உயர்வது உடலில் வேறு ஏதாவது பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

உள்ளுக்குள் இருக்கும் ஏதாவது உடல் நலக்கோளாறின் பிரச்சினையாக இது இருக்கக்கூடும். குறிப்பாக மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறியாக இது இருக்கும்.

சுளுக்கு பிடிச்சா என்ன பண்றதுனு தெரியலையா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க… சரியாகிடும்…

​கண்களில் நீர் வடிதல்

samayam tamil

அதிகமாக உடல் வெப்பமடைகிற போது, வெப்பம் அதிகம் உற்பத்தி செய்கிற மெஷின்களில் வேலை செய்கிறவர்களுக்கு இந்த பிரச்சினை அடிக்கடி ஏற்படும். கண்ணில் இருக்கும் நரம்புகள் மிகவும் சோர்வடைந்து விடும்.

அதனால் இந்த அறிகுறியை சாதாரண உடல் சூடு என்று மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. கண் நரம்புகள் செயல்திறன் குறையக் குறைய கண் பார்வை இழப்பைக் கூட ஏற்படுத்தக்கூடும்.

கண்களில் அடிக்கடி கண்ணீர் வருவது, கண் பாவைகளில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது நல்லது.Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube