இப்படம் சில மாதங்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலை சிம்பு பாடினார். தமனின் இசையில் சிம்பு பாடிய இப்பாடல் வெளியாகி செம ஹிட்டடித்துள்ளது.
பாடியது மட்டுமல்லாமல் லிரிக்கல் வீடியோவில் சிம்பு நடனமும் ஆடியுள்ளார். இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் சிம்புவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்பாடலை பாடுவதற்காக சிம்பு சம்பளமே வாங்கவில்லை.
தளபதிக்காகவும், தமனுக்காகவும் சம்பளமே வாங்காமல் சிம்பு இப்பாடலை பாடியுள்ளார். இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் சிலர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படம் வெளியாக விஜய் உதவினார்.
அதன் காரணமாகத்தான் சிம்பு விஜய்க்காக இப்படத்தில் சம்பளமே வாங்காமல் பாடல் பாடியுள்ளார் என பேசி வருகின்றனர். தற்போது இப்பாடல் யூடியூபில் பல சாதனைகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.