சத்யா மீது சந்தேகப்பட்டு வருண் அவரை ஒதுக்கி வைக்கிறார். சத்யா மீது தப்பு இல்லை என புரிந்து கொண்டு அவருடன் சேர வரும் போது சத்யா பற்றிய அதிரடியான உண்மை தெரிய வருகிறது.இதனால் சத்யாவை மீண்டும் பிரியும் நிலை வந்து விடுகிறது. இப்போது சத்யா அவரின் அம்மா மல்லிகாவுடன் தாடிக்குளத்தில் இருக்கிறார்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
சத்யாவை பற்றி தெரிந்து கொள்ள வருண் அவரின் சொந்த ஊரான குற்றாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருக்கும் சத்யாவின் மாமா பழனி வீட்டில் தான் இப்போது வருண் தங்கி இருக்கிறார். அவர் சத்யா பற்றிய எல்லா கதைகளையும் வருணிடம் சொல்லிவிட்டார். ஆனால் அவர்களுக்கு சத்யாவின் கணவர் தான் வருண் என்பது தெரியாது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இப்படி இருக்கையில் கார்த்திக் கிருஷ்ணா மீடியாவில் மல்லிகா மற்றும் சத்யாவை பற்றிபேட்டி கொடுக்கிறார். அவர்கள் தான் என்னுடைய முதல் குடும்பம் என்றும் சொல்கிறார். இதை பார்த்து காதம்பரி, மனோகர், தருண், ஸ்ருதி, ஆகியோர் ஷாக் ஆகுகின்றனர். இந்த பேட்டியை பழனியும் பார்க்கிறார். அப்போது தான் அவருக்கு சத்யாவும் மல்லிகாவும் தாடிக்குளத்தில் இருப்பவது தெரிய வருகிறது.
உடனே சத்யா, மல்லிகாவை பார்க்க கிளம்புகிறார். அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு வருணும் கூடவே செல்கிறார். இப்போது சத்யாவும் வருணும் சந்திக்க போகும் நேரம். இந்த தருணத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!