இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் புகழ் கோகுல் இயக்கத்தில் குமார் படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குமார் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சிம்பு கூறியிருக்கிறார். மேலும் கோகுலை மாற்றுமாறு சிம்பு கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இதையடுத்து கோகுலை நீக்கிவிட்டு அவருக்கு பதில் லிங்குசாமியை ஒப்பந்தம் செய்ய ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.
சிம்பு தற்போது தன் அப்பா டி. ராஜேந்தரை கவனித்து வருகிறார். டி. ராஜேந்தருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.