பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் மூன்றாவது திருமண முன்னாள் கணவர் கைது – தமிழ் செய்திகள்


40 வயதான பிரபல பாடகி 28 வயது காதலனை திருமணம் செய்த நிலையில் இந்த திருமணத்திற்கு தெரிவிக்கப்பட்ட பாடகியின் முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலகப் புகழ் பெற்ற பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜேசன் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் வெறும் 55 மணி நேரம் மட்டுமே நீடித்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு கெவின் என்பவரை திருமணம் செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ், 2007ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

britney spears10062022m2

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அஸ்காரி என்பவரை பிரிட்னி ஸ்பியர்ஸ் காதலித்து வந்தார். இந்த காதல் தற்போது திருமணம் முடிந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்திற்கு உலகப் புகழ்பெற்ற பல கலைஞர்கள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது

britney spears10062022m3

இந்த நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்ஸின் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்ததால் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதையும் மீறி திருமணம் நடக்கும் இடத்திற்கு ஜேசன் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்

britney spears10062022m1

தான் பிரிட்னி ஸ்பியர்ஸ் அழைப்பின் பேரில்தான் வந்ததாகவும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் ஜேசன் கூறியதால், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube