சிறு வயதில் இருந்தே இசையில் பேரார்வம் கொண்ட கேகே, சினிமாவில் சிங்கராக அறிமுகமாகும் முன்பே 3500க்கும் மேற்பட்ட ஜிங்கிள்ஸ்களை பாடியுள்ளார். அவரது மயக்கும் குரலால் கவரப்பட்ட ஏஆர் ரஹ்மான், தான் இசையமைத்த காதல் தேசம் படத்தின் மூலம் அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பை கொடுத்தார்.
அக்கா போல இருக்க… காதலன் கூறிய வார்த்தையால் எடையை குறைத்த வாரிசு நடிகை!
காதல் தேசம் படத்தில் கல்லூரி சாலை மற்றும் ஹாலோ டாக்டர் ஆகிய பாடல்களை பாடினார். தொடர்ந்து சினிமாவில் பாடும் வாய்ப்பைப் பெற்ற கேகே தமிழ் உட்பட நாட்டின் பல மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார் கேகே.
பாடகர் kk: பாடகர் கேகேவின் தலையில் காயம்.. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீஸ்!
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேகேவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், டியர் கேகே… என்ன நண்பா அவசரம்… உங்களைப் போன்ற திறமையான பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த வாழ்க்கையை மேலும் தாங்கக்கூடியதாக மாற்றினர் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பாடகர் kk: திடீர் நெஞ்சுவலி.. நடத்தியே அழைத்து செல்லப்பட்ட கேகே… திடுக்கிட வைக்கும் இறுதி நிமிட வீடியோ!