நீங்கள்
பின்னர் விடுதி அறைக்கு சென்ற அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேகேவின் முகம் மற்றும் தலையில் காயம் இருந்ததால் கொல்கத்தா போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
பாடகர் கேகே

பிரபல பாடகரான கேகே கடந்த செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் உள்ள குருதாஸ் கல்லூரியின் கலாச்சார விழாவில் பங்கேற்றார். இரவு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே, பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
மூன்றாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை மீரா ஜாஸ்மின்… பிரபல இயக்குனருடன் டேட்டிங்!
கூட்டத்தை பார்த்து பயந்தார்

ஆனால் கேகே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கேகே நிகழ்ச்சி நடைபெற்ற ஆடிட்டோரியத்திற்கு வந்தபோது அங்கிருந்த அளவுக்கு அதிகமான கூட்டத்தை பார்த்து பயந்துவிட்டார் என சக பாடகியான சுபலக்ஷ்மி டே தெரிவித்துள்ளார்.
SPB:’புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே’… மறக்க முடியாத பாட்டுத் தலைவன் எஸ்பிபி!
இறங்க மறுத்தார்

5.30 மணிக்கு ஆடிட்டோரியத்திற்கு வந்த கேகே கூட்டத்தை பார்த்து காரில் இருந்து இறங்க மாட்டேன் என்றார். அவருக்காகவே ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. அவருடைய கிரீன் ரூமில் இருந்த கேகே அங்கே செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் எனக்கு கிடைத்தது. அவருடன் பேசிவிட்டு செல்பி எடுத்துக்கொண்டேன்.
நிறுத்தியிருக்கலாம்..

அப்போதெல்லாம் கேகேவின் உடல்நிலை சரியாகத்தான் இருந்தது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அவருக்கு வியர்த்து கொண்டே இருந்தது. லைட்ஸைஆஃப் செய்யுமாறு ஒரு முறை கூறினார். ஆனால் அவருக்கு பதட்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தால் நிகழ்ச்சியை நிறுத்தியிருக்கலாம் என கூறியுள்ளார் சுபலக்ஷ்மி டே.