கொல்கத்தா நிகழ்ச்சி
தமிழ் சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு பாடகராக அறிமுகமானவர் கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் குருதாஸ் கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு தனது அறைக்கு சென்ற கேகேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கேகே மரணம்

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேகே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஆனார் அவரது முகத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததால் கேகேவின் மரணம் இயற்கையாக மாறியது என கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரும் சோகம்

கேகேவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மரணத்தால் கலங்கி நிற்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவருடன் கழித்த நாட்களை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கேகேவின் மகள் தாமரா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அப்பா குறித்து ஷேர் செய்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.
எப்போதும் நேசிப்பேன் அப்பா

அதாவது நேற்றுக் காலை நடைபெற்ற கேகேவின் இறுதிச்சடங்கு குறித்த தகவல்களை பகிர்ந்திருந்தார். அதோடு நான் உங்களை எப்போதும் நேசித்துக் கொண்டே இருப்பேன் அப்பா என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தாமராவின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தாமராவும் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.