பிரபல பாடகி ஒருவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு அறிவுரை கூறிய நிலையில் அந்த அறிவுரைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய பதில் தற்போது வைரலாகி வருகிறது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசையில் முதல் முதலாக ‘இந்திரா’ என்ற திரைப்படத்தில் ‘இனி அச்சமில்லை’ என்ற பாடலை பாடியவர் பாடகி ஸ்வேதா மோகன். அதன்பிறகு ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘குச்சி குச்சி ராக்கம்மா’ ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘பூம் பூம் ரோபா’ உள்ளிட்ட பல ஏஆர் ரகுமானின் இசையில் பாடல்களை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஏஆர் ரஹ்மான் இடைவிடாமல் பிசியாக இருக்கும் நிலையில் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என ஸ்வேதா மோகன் தனது டுவிட்டர் மூலம் அறிவுரை கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கான முயற்சி செய்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
ஏஆர் ரஹ்மான் கடந்த சில மாதங்களாக ஓய்வின்றி பிஸியாக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. மகள் திருமணம், துபாய் எக்ஸ்போ, கேன்ஸ் பட விழா, ஐபிஎல் இறுதிப் போட்டியில் இசைக்கச்சேரி, என பிஸியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான், அடுத்ததாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக தற்போது பிசியாக உள்ளார்.
ஜூலை 17 முதல் ஆகஸ்டு 21 வரை வடக்கு அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் இசை கச்சேரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்துகிறார். ஒரு மாதத்துக்கு மேல் அவரது வெளிநாட்டு இசை பயணம் தொடர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ‘இரவின் நிழல்’ ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட சில படங்களில் அவர் பின்னணி இசைப் பணியையும் செய்து வருகிறார்.
இதனால் ஓய்வின்றி உழைத்து வரும் ஏஆர் ரஹ்மானிடம் ‘தயவு செய்து உங்கள் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான நேரத்திற்கு தூங்குங்கள் என்று ஸ்வேதா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுரை கூறிய நிலையில் ‘கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், என் மீது அக்கறை காட்டியதற்கு நன்றி’ என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
முயற்சி செய்வேன் அன்பே ..உங்கள் அக்கறைக்கு நன்றி ?? https://t.co/64Kk84sJB4
– ஏ.ஆர்.ரஹ்மான் (@arrahman) ஜூன் 3, 2022