sisters tried to kill her brother in dindigul shocking truth revealed | கள்ளக்காதல் விவகாரம்.. சகோதரனை கூலிப்படை வைத்து வெட்டிய சகோதரி கைது..


திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயதான சூர்யா. கடந்த 25-ம் தேதி நள்ளிரவு வீட்டில் உறங்கியுள்ளார். அப்போது அதிரடியாக வீட்டிற்குள் புகுந்த கும்பல் தூங்கிக்கொண்டிருந்த சூரியாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த சூரியாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா போலீசார் இரவு அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். மேலும் சூர்யாவிற்கு வேறு எதும் முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான சர்தார் மற்றும் அவரது நண்பர்களான 25 வயதான யோகராஜ், 24 வயதான கௌதம், 24 வயதான ரியாஸ் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிக்கிய நால்வர் தான் சூர்யாவை வீடுபுகுந்து தாக்கியவர்கள் என்று தெரியவந்தது. பிடிபட்ட 25 வயதான சர்தாருக்கும் சூர்யாவின் பெரியம்மா மகளான ஏற்கனவே திருமணமான 30 வயதான மனிஷாவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மனிஷா திருமணமாகி கணவர் உயிரிழந்த நிலையில் தன்னைவிட 5 வயது சிறியவரான சர்தாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Read More : 6 முறை கருக்கலைப்பு.. தீயில் கருகி பெண் பலி.. கோவையில் நடந்த கொடூரம்

இதை கவனித்த சூர்யா தனது சகோதரியான மனிஷாவை கண்டித்துள்ளார். ஆனால் மனிஷாவால் தனது காதலை விட முடியவில்லை. சூர்யா தன்னை கண்டித்ததை மனிஷா தனது காதலன் சர்தாருக்கு தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரன் உயிருடன் இருக்கும் வரை நாம் ஒன்று சேர முடியாது என்று அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து சூர்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சர்தார் தனது நண்பர்கள் யோகராஜ், கௌதம் மற்றும் ரியாஸூடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சர்தாரின்  திட்டத்திற்கு உதவிய மனிஷா மற்றும் அவரது சகோதரி சீமா தேவியை போலீசார் பிடிக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் தான் விஷம் குடித்து விட்டதாகவும் தன்னை பாஜக பிரமுகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த போலீசார் மனிஷாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனையில் மனிஷா விஷம் குடிக்காமல் நாடகமாடியது அம்பலமானது

மருத்துவமனையில் வைத்தே மனிஷா, சீமா தேவி ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அனைவரையும் சிறையில் அடைத்தனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.



Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube