இந்திய சினிமாவின் ‘டான்’ உடன் சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்கள் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது தெரிந்ததே. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் முந்தைய படமான ‘டாக்டர்’ படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக அவரது அடுத்த படமும் 100 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் ‘டான்’ வெற்றி குறித்து திரையுலகினர் பலர் பாராட்டிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். எனக்காக நேரம் ஒதுக்கிய ‘தலைவர்’ அவர்களுக்கு ‘டான்’ படக்குழுவினர் சார்பில் நன்றி என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் டான் உடன் ??❤️ சூப்பர் ஸ்டாரை சந்தித்தார் @ரஜினிகாந்த் ஐயா மற்றும் அவரது ஆசிகளைப் பெற்றேன்.. அந்த 60 நிமிடங்கள் வாழ்நாள் நினைவாக இருக்கும்.. உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி தலைவா மற்றும் மதிப்புமிக்க பாராட்டுக்களுக்கு #தாதா ????❤️❤️❤️ pic.twitter.com/mG1Pgbrjb7
— சிவகார்த்திகேயன் (@Siva_Kartikeyan) மே 30, 2022