இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யாவின் அடுத்த திரைப்படமான ‘பொம்மை’ படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘பொம்மை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாகவும் பிரியா பவானிசங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் ட்ரெய்லரை சற்றுமுன் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரொமான்ஸ் மற்றும் திரில்லர் கலந்த இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரைலரில் ‘உலகத்தில் ரொம்ப விசித்திரமானது மனிதனோட மூளை. விஞ்ஞானம், மருத்துவம் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது அது. கோடிக்கணக்கான மர்மங்கள் அதில் உள்ளன’ என்ற வசனத்துடன் இந்த டிரெய்லர் தொடங்கியுள்ளது.