பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் உடல் அமைப்பும் தோற்றமும் மாறி சிலர் அவதிப்படுகின்றனர். இடையில் சைஸ் ஜீரோ பிரபலமாகி லேசாக பூசின உடல்வாகு இருப்பவர்களையும் கூட பாதித்தது. ஆனால் என்ன சைஸில் இருந்தால் என்ன ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை சமீபகாலமாக பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதில் ஒருவர்தான் உடல் எடையால் மற்றும் பருமனான தோற்றத்தை கிண்டல் செய்யப்பட்ட நடிகை சோனாக்ஷி சின்ஹா.
பாலிவுட்டின் மிகப்பிரபலமான நடிகரான சத்ருகன் சின்ஹாவின் ஒரே மகள் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஹிந்தி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் பரிசீலனை ஆனவர். ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தில் இதுவரை நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் என்ற பெருமை சோனாக்ஷி சின்ஹாவுக்கு உண்டு.
லிங்கா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர்தான் மெழுகு பொம்மை போன்ற தோற்றமளிக்கும் சோனாக்ஷி சின்ஹா. இவர்களின் குடும்ப நண்பரான பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் சோனாக்ஷி சின்ஹாவை தபாங் திரைப்படத்தில் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை தவிர தொழில் முனைவோர், ஃபேஷஷனிஸ்ட் என்ற பல முகங்கள் கொண்ட சோனாக்ஷி சின்ஹாவின் குழந்தை பருவம் மற்றும் திரைத்துறைக்கு வரும் முன்பான காலம் ஆகியவை அவ்வளவு சிறப்பானதாக இல்லை.
சிறு வயதில் கொழு கொழு குழந்தையாக இருந்த சோனாக்ஷி சின்ஹா உடல் எடை மற்றும் குண்டான தோற்றத்தால் பெரிதாக பாதிக்கப்பட்டிருந்தார். இவர்களெல்லாம் எப்படி நடிகையாக முடியும் என்று திரையுலகிற்கு வருவதற்கு முன்பு பலரால் நேரடியாக தாக்கப்பட்டவர் சோனாக்ஷி.
பாடி பாசிட்டிவிட்டியை வலியுறுத்தி சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
உடல் எடையும் அமைப்பும் எப்படி இருந்தாலும் பரவாயில்லை நமது பார்வையில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா பேட்டியில் “ஆரம்பம் அளித்த கட்டத்தில் எனக்கு என்னுடைய உடல் தோற்றத்தை பற்றி கேலி செய்தவர்களை எதிர்கொள்வது மிகவும் சவாலாக இல்லை. நாள் முழுவதும் நெகட்டிவிட்டியை உணர்ந்தேன்; ஆனால், காலம் செல்ல செல்ல எனக்கு நான் எப்படி தோற்றம் அளிக்கிறேன் என்னுடைய உடலமைப்பு, என்னோட ஆரோக்கியம், நான் அணியும் ஆடைகள் எனக்கு வசதியாக இருக்கிறதா என்பது மட்டும் தான் எனக்கு முக்கியமாக பட்டது. இதனால் மற்றவர்களின் கேலியான பார்வை மற்றும் கருத்தை நான் கண்டு கொள்ளவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் 9 உணவு வகைகள்..!
ஒவ்வொருவரின் உடல் மற்றும் தோற்றத்திற்கு ஏற்றவாறு தங்களுடைய ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல தான் சோனாக்ஷி சின்ஹா தன்னுடைய உடலமைப்புக்கு ஏற்றவாறு தனக்கு எது வசதியாக இருக்கும் என்பதைப் பற்றிய புரிதலும் அதற்கு ஏற்றார் போல ஸ்டைல் செய்யும் டிசைனர்களுடன் பணியாற்றுவதாகக் கூறினார். டிரெண்டில் இருப்பதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட ஃபேஷன் அல்லது ஸ்டைல் பொருத்தமாக இருந்தால் அதை நேர்த்தியாக அணிந்து தனித்துவமாக, கிரேஸ்ஃபுல்லாக பேஷன் ஸ்டேட்மெண்ட் மேற்கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார். கேஷுவல் ஆடைகளை ஆனால் ஃபார்மல் உடையும் கொஞ்சம் கிளாமராக தோற்றத்திற்கும் ஸ்டைலிஸ்ட்டுகளின் உதவி கண்டிப்பாக தேவை என்று தெரிவித்திருந்தார்.
அழகு என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு கண்ணோட்டத்திலும் வேறுபடும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது உங்களை அழகாக காட்டும். இதற்காக பெரிதாக எதுவும் மெனக்கெட வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் மேக்கப்பை மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்துவதாக சோனாக்ஷி கூறியிருந்தார்.
மினிமலிஸ்டாக இருப்பது பிடிக்கும் என்றாலும் புதிய டிரெண்டுகளை முயற்சி செய்து பார்ப்பதில் சோனாக்ஷி எப்போதுமே பின் வாங்கியதில்லை. ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக சோனாக்ஷி சின்ஹா தனது புதிய வணிகத்தை தொடங்கியுள்ளார். நடிகைகள் அழகு பொம்மைகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றி பெறுவது பலருக்கும் உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. சமீபத்தில் SOEZI தனது புதிய நெயில் பிராண்டை அறிமுகம் செய்திருந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.