சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட நாசர், நடிகர் சங்க பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட கார்த்தி மற்றும் நடிகர் சங்க நிர்வாக குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பூச்சி முருகன் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி தற்போது பாதியில் இருப்பதால் அதை முடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.