மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் | ஜூன் 11 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – News18 Tamil


தூத்துக்குடி அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன்11) நடைபெறுகின்றது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு, சம உரிமை திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திட்ட இயக்குநர் (ஊரக வாழ்வாதார இயக்கம்), இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், மாவட்ட தொழில் மைய அலுவலர், உதவி இயக்குநர், (மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (திறன் பயிற்சி) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலமாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான (18 வயதுக்கு மேற்பட்ட) சிறப்பு வேலைவாய்பபு முகாம் நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வ.உ.சி கல்லூரி வளாகத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் உள்ளது.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். மாற்றுத்திறனாளிகளின் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அனைத்துவகை (18 வயதுக்கு மேற்பட்ட) மாற்றுத்திறனாளிகளும் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை UDID (தனித்துவம் வாயந்த தேசிய அடையாள அட்டை) மற்றும் கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கவும் (திறன் பயிற்சி) தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே மேற்கண்ட பயிற்சியை மேற்கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : முரளி கணேஷ்

வெளியிட்டவர்:சங்கரவடிவு ஜி

முதலில் வெளியிடப்பட்டது:

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரையிலான செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube